திருவள்ளூர் மேற்கு மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தலைவர் காயிதே மில்லத்தின் 126ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணம்! - திருவள்ளூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயிதே மில்லத் 126ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழகப்பட்டது.
நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி
இதனைத் தொடர்ந்து பக்தியால் பேட்டை பகுதியில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாகிகள் இக்பால் யாஸீன், மௌலானா, முகமது காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், நகர தலைவர் அப்துல் கலாம், நகர செயலாளர் ஜல்கான், நகர பொருளாளர் சாஹிப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.