திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை ஊராட்சியில் வருவாய்த் துறையின் சார்பில் மக்கள்தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்று அனைத்துத் துறைகளின் சார்பில் மொத்தம் 937 பயனாளிகளுக்கு 54.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கிய இம்முகாமில் திருத்தணி பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன், எம்எல்ஏ நரசிம்மன் வட்டாட்சியர்கள் சுகந்தி, ரேவதி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.