தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் பாஜகவை அனுமதிக்க மாட்டோம்' - Tiruvallur MP Jayakumar Cycle Rally

தமிழ்நாட்டைப் பிடிக்கும் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஈடேறாது, காங்கிரஸ் கட்சி அதை அனுமதிக்காது என திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் காங். எம்பி
திருவள்ளூர் காங். எம்பி

By

Published : Jul 12, 2021, 6:51 PM IST

Updated : Jul 12, 2021, 9:39 PM IST

திருவள்ளூர்: பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் பங்கேற்றார். இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற பேரணியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மத்திய அரசுக்கு கண்டனம்

பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை தற்போது கிடுகிடுவென அதிகரித்துவருகிறது. இதனால் ஏழை, எளிய பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிப்பதால் விலைவாசி அதிகரிப்பைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட இந்தச் சைக்கிள் பேரணி திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி. சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

காங்கிரஸ் சைக்கிள் பேரணி

இதில் திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் கே. ஜெயக்குமார் கலந்துகொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குச் சைக்கிளை ஓட்டி பெட்ரோல், டீசல், விலை அதிகரிப்பால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அத்தியாவசியப் பொருள்களைக் குறைக்க யோசனை

அப்போது, அவர் பேசுகையில், மத்திய பாஜக அரசு ஆட்சி செய்ய தகுதி இல்லை என்றும், அவர்கள் ஆட்சியைவிட்டு இறங்கினால் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையும் என்றும் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டைப் பிடிக்கும் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஈடேறாது என்று அடித்துக்கூறிய ஜெயக்குமார், அதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு தேதி அறிவிப்பு

Last Updated : Jul 12, 2021, 9:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details