திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயில் பகுதியில் உள்ள கூவம் ஆற்று படுகையில் தேங்கியுள்ள நீர், கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறு. இந்த நீரை அடையாளம் தெரியாத நபர்கள் மின் மோட்டார்களை கொண்டு உறிஞ்சி வருகின்றனர்.
கூவம் ஆற்றில் திருடு போகும் தண்ணீர்; அலுவலர்கள் அலட்சியம்! - coovam river
திருவள்ளூர்: கூவம் ஆற்றுப்படுகையில் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதால், கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் உறிஞ்ச பயன்படும் மின்மோட்டார்
இதனால் தற்போது கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கோடைக்காலம் என்பதால், ஆற்றுப்பகுதி பாலம் பாலமாக வெடித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் ஆற்றையே திருடி ஏப்பம் விட்டு விடுவர். இதனால் அரசு அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.