திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த புதூர் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் பற்றாக்குறை இருந்துவருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்து சென்னை காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
திருத்தணியில் குடிநீர் பற்றாக்குறை; பொதுமக்கள் சாலை மறியல் - சாலை மறியல்
திருவள்ளூர்: திருத்தணி அருகே கடந்த ஒருமாத காலமாக குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தண்ணீர் பிரச்னை
இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் சமரசம் ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.