திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ஜோதி நகர் பகுதியில் சித்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரியை திருத்தணி ஒன்றியம் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் ஏரி நிரம்பியது.
ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீணாகும் ஏரி நீர் - பொதுமக்கள் காட்டம்!
திருவள்ளூர் : திருத்தணி ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீணாகும் ஏரி நீரால் நகராட்சியில் மீண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஏரியை ஒன்றிய நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் ஏரியின் மதகு சேதமடைந்து, அதிலிருந்து நீர் வீணாக வெளியேறி கால்வாய் வழியாக நந்தி ஆற்றில் கலக்கிறது.
நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏரிக்கு வந்த நீர், ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீணாக போவதால் நகராட்சியில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், இதனை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து ஏரியின் மதகை சீரமைத்து நீர் வீணாகாமல் தடுக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.