திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கடந்த ஆறு மாதங்களாக வறண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கிடுகிடுவென உயர்ந்தது.
வீணாகும் ஏரி நீர்: அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை பாயுமா? - poondi water issue
திருவள்ளூர்: அரசு அலுவலர்களின் கவனக்குறைவால் 5 கன அடி நீர் வீணாகியிருப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கனமழையின்போது துண்டிக்கப்பட்ட மின்சாரம் 28 மணி நேரத்திற்கு பின் வந்து மீண்டும் துண்டிக்கப்பட்டது. ஆனால், அரசு அலுவலர்களின் மெத்தனப்போக்கு காரணமாக லிங்க் கால்வாய் வழியாக 5 கன அடி நீர் வேகமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அலுவலர்களின் மெத்தனப்போக்கால் தண்ணீர் வீணாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.