திருவள்ளூர் மக்களவைத் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஷ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தல்படி ஆவடியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நீ ஓட்டு போட்டா ஹீரோ இல்லனா ஜீரோ' - வாக்காளர் விழிப்புணர்வு - chennai
சென்னை: வாக்காளர் விழிப்புணர்வு முகாம் அதிகாரிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிகாரிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த முகாமில் வாக்காளர்கள் 100விழுக்காடு தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முகாமில் பங்கேற்ற 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஆவடி நகர அமைப்பு அலுவலர் சுப்புத்தாய் துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய சுவரொட்டி வாகனத்தில் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அந்த துண்டுப் பிரசுரத்தில் 'நீ ஓட்டு போட்டா ஹீரோ ஓட்டு போடவில்லை என்றால் நம் நாடு ஆகிடும் ஜீரோ' என்ற வாசகம் இருந்தது. இந்நிகழ்வில் ஆவடி பெருநகராட்சி ஆணையர் ஜோதிக்குமார், ஆவடி வருவாய் அலுவலர் இம்ராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.