தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளு - வேட்பாளர் வெளியேற்றம்! - ஊராட்சியில் தலைவர் பதவி

திருவள்ளூர்: வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் தோல்வியடைந்த வேட்பாளரின் கணவர் தாக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

vote counting
vote counting

By

Published : Jan 3, 2020, 9:31 AM IST

நடந்துமுடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திருவள்ளூர் ஒன்றியம் காக்களூர் ஊராட்சியின் வெற்றி குறித்து அறிவிக்கப்பட்டது. ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியாகவும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட காக்களூர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக திமுகவைச் சேர்ந்த சுபத்ரா ராஜ்குமார், சசிகலா ஜெயசீலன் போட்டியிட்டனர்.

ஆரம்பம் முதல் இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியது. இந்தநிலையில் சாத்தனூர் ஊராட்சியில் 26 வாக்குகள் வித்தியாசத்தில் சிவராஜ்குமார் வெற்றிபெற்றதாக அறிவித்து அதற்கான சான்றிதழை ஒன்றிய தேர்தல் அலுவலர் வெங்கடேசன் வெற்றி வேட்பாளரிடம் வழங்க முற்பட்டபோது தோல்வியடைந்த சசிகலாவின் கணவர் ஜெயசீலன் அந்தச் சான்றிதழை பிடுங்கி ஒன்றிய தேர்தல் அலுவலரை தாக்க முற்பட்டார்.

அப்போது இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் வெளியில் தள்ளிக் கொண்டுவந்தனர். பின்னர் இது குறித்து விசாரித்தபோது சசிகலா ஜெயசீலன் தரப்பில் 60 வாக்குகளை ஒன்றிய தேர்தல் அலுவலர் ஏமாற்றிவிட்டதால் அது குறித்து கேட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது..

வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளு

இதைத்தொடர்ந்து காவல் துறையினர் ஒன்றிய தேர்தல் அலுவலரை விசாரித்தபோது, நேர்மையான முறையில் இங்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இருதரப்பினரையும் முன்வைத்து வாக்குகள் எண்ணப்பட்டன. எதுவும் இங்கு மறுக்கப்படவில்லை. அவர் ஏதோ தோல்வியின் ஆதங்கத்தில் பேசுகிறார். ஆகையால் வெற்றிபெற்ற சிவராஜ்குமாருக்குச் சான்றிதழ் அளிக்கப்படும் என ஒன்றிய தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் சசிகலாவின் கணவர் ஜெயசீலன், அவரது ஆதரவாளர்களை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியே இழுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: துப்புரவு செய்த இடத்தையே ஆளும் வீரியமிகு தாய்; பஞ்சாயத்து தலைவியின் வெற்றிப் பாதை!

ABOUT THE AUTHOR

...view details