தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருவதால் தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திலும் அரசு விதித்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட நகராட்சி ஆணையர் சந்தானம் திருவள்ளூரில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தி சென்னை சில்க், ஆர்.எம். ஜூவல்லர்ஸ், எம்.எம். சில்க், ஸ்ரீ ஜெய் கிருஷ்ணர் டெக்ஸ்டைல், ஸ்ரீகுமரன் டெக்ஸ்டைல், யாஸ்மின் டெக்ஸ்டைல், ரிலையன்ஸ் ட்ரெண்டு, ஸ்ரீ சில்க் உள்ளிட்ட கடைகள் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டதால் அக்கடைகளுக்கு 45 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தார்.