தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல் - thiruvallur district news

திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை வைத்து உறவினர்களும், கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

villagers-block-the-chennai-tirupati-national-highway
villagers-block-the-chennai-tirupati-national-highway

By

Published : Jul 14, 2021, 9:37 PM IST

திருவள்ளூர்:திருத்தணி அருகே பொன்பாடி காலனியைச் சேர்ந்த இந்திராணி என்ற மூதாட்டி இன்று காலை கிராமத்திற்கு அருகில் உள்ள சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது திருப்பதியிலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற டெம்போ டிராவல் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை

இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நீடித்ததால், மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து முடங்கியது.

உறவினர்கள் சாலை மறியல்

பின்னர், பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இறந்த மூதாட்டியின் சடலத்தை காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரிசெய்தனர்.

இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகம்: மனைவி, மாமியாரை குத்திக் கொன்ற நபர்!

ABOUT THE AUTHOR

...view details