தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சோழவரம் ஏரியை பலப்படுத்த இத செய்யுங்க! பொதுமக்கள் யோசனை - கிராம மக்கள்

திருவள்ளூர்: சோழவரம் ஏரியை பலப்படுத்த பொதுப்பணித் துறையினர் முறையாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

File pic

By

Published : May 15, 2019, 10:17 AM IST

சென்னை குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று சோழவரம் ஏரி. இந்த ஏரி தற்போது வெயில் தாக்கம் காரணமாக முற்றிலும் வறண்டுபோய் உள்ளது.

இதனால் பொதுப்பணித் துறை அலுவலர்கள்,

  • ஏரியின் கரைகளை பலப்படுத்த வேண்டும்,
  • ஒரே இடத்தில் ஆழமாக மண்ணை தூர்வாரக் கூடாது,
  • அனைத்துப் பகுதிகளிலும் சமமாக தூர்வார வேண்டும்,
  • தூர்வாரப்படும் சவுடு மண்ணை விற்பனைக்கு அனுப்பாமல் உரிய முறையில் சோழவரம் ஏரியினை பலப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அலமாதி எருமை வெட்டி பாளையம், எடப்பாளையம், சோழவரம் உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்து சவுடு மண்ணை விட்டுச்சென்ற லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சோழவரம் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அளித்த உறுதியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details