தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நாங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை’ - ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் - இரண்டு கிராம மக்கள் மனு

செம்பரம்பாக்கம் ஊராட்சியிலுள்ள இரண்டு கிராம மக்கள், தாங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்
ஆட்சியரிடம் மனு அளித்த கிஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்ராம மக்கள்

By

Published : Jul 27, 2021, 12:43 PM IST

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி ஒன்றியத்தில் இருந்த செம்பரம்பாக்கம் ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம் பிரித்தபோது திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. ஆனால், இந்த ஊராட்சியில் உள்ள பாப்பான்சத்திரம், பழஞ்சூர் ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டும் வாருவாய் துறை காஞ்சிபுரம் மாவட்டத்திலும், வாக்குரிமை திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்ளது.

ஆட்சியரிடம் மனு

இதனால், இந்த பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதி மக்களுக்கு பட்டா, சாதி சான்று, பிறப்பு, இறப்பு சான்று என அரசு சேவை தேவைக்கு அலைக்கழிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல முறை அலுவலர்களுக்கு மனு அளிக்கப்பட்டது. பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை.

இந்நிலையில், தங்களுக்கான நிலையான மாவட்டத்தை உறுதிபடுத்தி தருமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செம்பரம்பாக்கம் ஊராட்சி தலைவர் சாந்தி வின்சென்ட், வார்டு உறுப்பினர்களுடன் தாங்கள் எந்த மாவட்டதில் இருக்கிறோம் என்பது தெரியவில்லை என புகார் அளித்துள்ளார்.

அரசுக்கு கோரிக்கை

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் மாவட்ட பிரச்னைக்காக போராடி வருகிறோம். தற்போது அமைந்துள்ள புதிய ஆட்சி தங்களுக்கு இரண்டு கிராமத்தையும் திருவள்ளூர் மாவட்டத்தில் இணைத்து தருமாறு கோரிக்கை வைப்பதாக கூறினார்.

அதேபோல் தங்கள் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டு 4.6 ஏக்கர் நிலம் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிலத்தை மக்களுக்கு பிரித்து வழங்கப்படவில்லை. அதனையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழங்குடியின மக்களுக்கு நில உரிமைப் பட்டா - நேரில் சென்று வழங்கிய ஈரோடு கலெக்டர்

ABOUT THE AUTHOR

...view details