தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளங்களைத் துார்வாரும் பணியைத் தொடங்கிவைத்த எம்.எல்.ஏ! - வாட்டர் மிஷின் திட்டத்தை தொடங்கிவைத்த கும்மிப்பூண்டி எம்எல்ஏ

திருவள்ளூர்: வாட்டர் மிஷின் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மூன்று குளங்களைத் தூர் வாரும் பணியை கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் தொடங்கிவைத்தார்.

vijayakumar mla

By

Published : Aug 16, 2019, 11:36 AM IST

Updated : Aug 16, 2019, 12:10 PM IST

'மழை நீர் உயிர் நீர்' என்ற பழமொழிக்கேற்ப, மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை உரிய முறையில் சேமித்து வைப்பதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடின்றி வாழ முடியும். அதற்கு முதலாவதாக வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு முறையை செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து குளங்கள், ஏரிகள் துார்வாரப்பட்டால் மழைக்காலங்களில் மழைநீர் வீணாகக் கடலில் செல்வதைத் தடுத்து சேமித்து வைக்க முடியும். மழையை சேமித்து வைக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துார்வரும் பணியைத் தொடங்கிவைத்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ

இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் நாயுடு குப்பம், பல்லவாடா, போந்தவாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மழைநீரைச் சேகரிக்கும் வகையில் வாட்டர் மிஷின் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதனை கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் பூமி பூஜை போட்டு தொடங்கிவைத்தார். இத்திட்டமானது 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அந்த பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரப்படுகிறது. குளங்கள் தூர்வாரப்படுவதால், அதிகளவில் மழைநீர் சேமிக்க முடியும் என எம்எல்ஏ விஜயகுமார் தெரிவித்தார்.

Last Updated : Aug 16, 2019, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details