தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது வாங்க வந்தவரை நையப்புடைத்த காவலர்கள்: வைரலாகும் காணொலி - lockdown in chennai

திருவள்ளூர்: அரசு மதுபானக் கடையில் கூட்ட நெரிசல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தினால் காவலர்கள் இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கினார்கள். இதுகுறித்த காணொலி வைரலாகப் பரவிவருகிறது.

police-attacking-the-liquor-buyer
police-attacking-the-liquor-buyer

By

Published : Jun 22, 2020, 7:08 AM IST

சென்னையில் ஜூன் 19 முதல் ஜூன் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதனையொட்டியுள்ள பகுதிகளான திருவள்ளூர் மாவட்ட ஈக்காடு, பூந்தமல்லி, சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

அதனால் திருவள்ளூர் நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையில் 18ஆம் தேதியே மது வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

மது வாங்க வந்தவருக்கு தர்ம அடி

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மீஞ்சூர் காவல்துறையினருக்கும், மது வாங்க வந்த இளைஞர் ஒருவக்கும் கூட்ட நெரிசல் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் காவலர்கள் அந்த இளைஞரை கைகளில் வைத்திருந்த பைப்களால் சரமாரியாக தாக்கினர். அதுகுறித்த காணொலி பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க:முழு ஊரடங்கு: மீஞ்சூரில் ஆட்சியர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details