தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு : நீதி கேட்டு விசிக ஆர்பாட்டம் - VCK protest against hathras rape

திருவள்ளூர் : ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

vck-protest-in-tiruvallur-against-hathras-rape
vck-protest-in-tiruvallur-against-hathras-rape

By

Published : Oct 10, 2020, 10:26 PM IST

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்தும், இந்தக் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் சித்தார்த்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு விசிகவினர் நடத்திய ஆர்பாட்டம்

திருவள்ளூர், மீரா திரையரங்கம் அருகே நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய வழக்கறிஞர் இளவரசு, "மனிஷாவிற்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் அல்லது இந்தியாவை இரண்டாக பிரித்துக் கொடுத்து விடுங்கள். எங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். படுகொலை செய்யப்பட்ட பெண் இந்து மதத்தைச் சார்ந்தவரே, ஆனால் எந்த ஒரு இந்து அமைப்பும் மனிஷாவிற்கு நீதி கேட்டு போராட முன்வராதது கண்டிக்கத்தக்கது" என்றார்.

விசிகவினர் ஆர்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைமை நிலையச் செயலர் பாலசிங்கம், மாநில இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணை செயலர் தளபதி சுந்தர், கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலர் இராசகுமார், தொகுதிச் செயலர் இளவரசு, தொண்டர் அணி மாநில துணைச் செயலர் அருண் கவுதம், அரசை மையம் மாநில துணைச் செயலர் கைவண்டுர் செந்தில், மாநில தேர்தல் குழு செயலர் ரமேஷ் உள்ளிட்ட பல மாநில, மாவட்ட, நகர ஒன்றிய பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க... ஹத்ராஸ் கொடூரம் : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 40 பெண் வழக்குரைஞர்கள் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details