திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவ இடஒதுக்கீடு; விசிக கண்டன ஆர்ப்பாட்டம்! - 50 percent reservation for medical students
திருவள்ளூர்: மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க கோரி திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும், வங்கி தேர்வில் உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறிவித்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், “வங்கி பணியாளர் தேர்வில் மத்திய அரசு பட்டியலின, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டில் 10 விழுக்காட்டை பறித்து உயர் வகுப்பினருக்கு வழங்குகிறது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.