தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ராமதாஸ் மீண்டும் சாதி வன்முறையை நடத்த முயற்சிக்கிறார்..!' - திருமா குற்றச்சாட்டு! - தொல்.திருமாவளவன்

திருவள்ளூர்: "பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் சாதிக் கலவரத்தை தூண்டி பெரிய வன்முறை வெறியாட்டத்தை நடத்த தயாராகி வருகிறார்" என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Thiruma

By

Published : May 5, 2019, 6:05 AM IST

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே தென்னிந்திய திருச்சபை, சென்னை பேராயம் குருசே கரங்கள் இணைந்து நடத்திய 79ஆவது ஆண்டு ஆண்கள் ஆன்மீக கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் சிறு வணிகம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை பாதுகாப்பதற்காகவே அவர் பெரு வணிக நிறுவனங்களோடு கூட்டு வைத்திருக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்லப்பிள்ளையாக உள்ள மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அவர் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது மக்களுக்கு உணர்த்தப்பட்டதால், நாற்பதுக்கு 40 இடங்களிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி

பாமக நிறுவனர் ராமதாஸ் திரித்துக் கூறி சமூகப் பதற்றத்தை உருவாக்கி, சாதி கலவரத்தை ஏற்படுத்த மீண்டும் முயற்சித்து வருகிறார். மே.23ஆம் தேதி தேர்தல் முடிவு வருவதற்கு முன்போ அல்லது அந்த நாளில் பெரிய வன்முறை வெறியாட்டத்தை நடத்த தயாராகி வருகிறார். இதை அரசு கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details