திருவள்ளூர் :திருத்தணியிலிருந்து திருச்செந்தூர் வரையிலான வேல் யாத்திரையை வருகின்ற 6ஆம் தேதி தொடங்க தமிழ்நாடு பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு தடைவிதிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்திவரும் சூழலில், திருவள்ளூர் மாவட்ட விசிகவினர் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி நேற்று (நவ.02) மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
வேல் யாத்திரைக்கு தடை கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் விசிகவினர் மனு! - vck news
திருத்தணியிலிருந்து திருச்செந்தூர் வரை பாஜகவினர் செல்லவிருக்கும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கவேண்டும் என திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விசிகவினர் அம்மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (நவ.02) மனு அளித்தனர்.
வேல் யாத்திரைக்கு தடை கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் விசிகவினர் மனு
அதில், "இந்த யாத்திரையின் மூலம் தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டி அதன் மூலம் மிகப்பெரிய சாதிய, மத மோதல்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சமூக அமைதியையும், நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கும் பாதிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : 'கிரிமினல்களுக்கு பதவி கொடுத்து மக்களை அச்சுறுத்துவதுதான் பாஜகவின் கொள்கை'- தொல். திருமாவளவன்