திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டி பகுதியிலுள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில், நாளொன்றுக்கு 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் ஆயிரத்து 600 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கான ஊதியத்தை ஒப்பந்ததாரரிடம் ஊழியர்கள் பெற்று வந்த நிலையில், கடந்த ஒன்பது மாத காலமாக ஒப்பந்ததாரர்களுக்கு பணிக்கான காசோலைகளை மின்வாரியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காசோலைகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மின்வாரியத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஓப்பந்ததாரர்கள் இன்று அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.