திருவள்ளூர்: திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஒன்பது நிலை கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து தேர் வீதி இணைக்கும் 56 படிகள் 92 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தேர் சீர்செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெள்ளித்தேர் 18.30 லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்யும் பணியினையும் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெற்று வெள்ளோட்டம் நடைபெறும்.