திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தின் ஆரணியாற்றில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலதுறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் அடையாள ஆட்டை உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாததால், உயிரிழந்த நபரின் விவரங்கள் குறித்து தெரியவில்லை.