உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பை கண்டித்து புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையில், பூவிருந்தவல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அக்கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா வைரஸ் காரணமாக தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.