தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் - வெள்ள நிவாரண நிதி வழங்கிய உதயநிதி - மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனமழையால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கினார்.

வெள்ள நிவாரண நிதி வழங்கிய உதயநிதி
வெள்ள நிவாரண நிதி வழங்கிய உதயநிதி

By

Published : Nov 15, 2021, 4:43 PM IST

திருவள்ளூர்: கனமழை காரணமாக வீடுகளை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இன்று (நவ.15) வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுகவின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பின்னர், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாய், தலையணை, போர்வை, அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி, இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:Crop Damage TN பயிர் சேதம்: முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு

ABOUT THE AUTHOR

...view details