திருவள்ளூர்:திமுகவின் மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பாசறை பயிற்சி கூட்டம் இன்று (நவ.5) திருவள்ளூரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பதாக இருந்த நிலையில் அவர் உடல்நிலை காரணமாகப் பங்கேற்க முடியாததால், இளைஞர் அணிச் செயலாளர், இளைஞர் நலன் மேம்பாட்டு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், "வாக்குச்சாவடி முகம் முகவர்களை நம்பித்தான் திமுக உள்ளது. நமது வெற்றி எவ்வித குறுக்கு வழிகளையும் கையாளாமல், நேர்மையான வெற்றியாக இருக்க வேண்டும். திமுகவின் மற்றொரு முகமாக வாக்குச்சாவடி முகவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை உரிய ஏழை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நேரம் ஒதுக்க வேண்டும். மேலும் ஏழை எளியவர்கள் முதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "எனது சனாதனம் குறித்த பேச்சு, பல்வேறு வகையாகத் திசை திருப்பப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஏனென்றால் நான் பேசியதில் தவறு இல்லை. பாஜகவுடன் கூட்டணியாக உள்ளது அமலாக்கத்துறை மட்டுமே. தற்போது அமைச்சர் ஏ.வா.வேலு வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இரண்டு தினங்களாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.