திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த பெரிய முல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (45). இவர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில் (36) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மீஞ்சூரிலிருந்து செங்குன்றம் செல்லும் நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் பெரிய முல்லைவாயில் மேம்பாலம் அருகே, எதிரே வந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.