திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதி சாலைகளில் தனியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அனைவரையும் வழிமறித்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கத்தியைக் காட்டி, மிரட்டி அவர்கள் அணிந்திருக்கும் நகைகள், பணம், கைப்பேசி ஆகியவற்றை கைப்பற்றி செல்வதாக தொடர்ந்து காவல் துறையினருக்குப் புகார் வந்தது.
இந்நிலையில் கொண்டகரைப் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரை, வழி மறித்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் கத்தியைக் காட்டி, மிரட்டி அவரிடம் இருந்து கைப்பேசி, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்ப முயன்றபோது, பாதிக்கப்பட்ட மாரி, கூச்சலிட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிப்பிடித்து, தர்ம அடி கொடுத்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.