தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பஸ்ஸில் அசால்டாக 12 கிலோ கஞ்சா கடத்தல்.. பெண் உள்ளிட்ட இருவர் சிக்கியது எப்படி? - காவல்துறையினர் பறிமுதல்

தமிழக - ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள எளாவூர் சோதனைச் சாவடியில் தமிழக அரசு பேருந்தில் கடத்திய இருவரை கைது செய்த போலீசார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தமிழக - ஆந்திரா பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; பெண் உள்பட இருவர் கைது
தமிழக - ஆந்திரா பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; பெண் உள்பட இருவர் கைது

By

Published : Dec 22, 2022, 9:34 AM IST

திருவள்ளூர்:ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் உதயகிரியிலிருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது வாசனை திரவியங்கள் பூசிய பிரத்தியேக வடிவிலான பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அந்தப் பையை சந்தேகத்தின் அடிப்படையில் காவலர்கள் சோதனை செய்தனர். அந்தப்பையில் இருந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த சல்மான் அக்தர் (24), கோழிக்கோட்டை அஜித்தா (45) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதையடுத்து, அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி கேரளா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய எடுத்து செல்வதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அதிக மதிப்பெண் வழங்குவதாக மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details