திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு, சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இதனைத் தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாத்தான்குப்பத்திலிருந்து கடல் வழியாக இரண்டு பேர் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, மூர்த்தி (53) அவரது மகன் ராஜ் குமார் (22) ஆகிய இருவரும் மரப் படகில் ஒன்பது டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்றது தெரியவந்தது.