தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் அருகே ஏரியில் முழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு! - Avadi belongs to Tamil Nadu Housing Board residential area

வெள்ளவேடு அருகே கோலப்பன்சேரி ஏரியில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் அருகே ஏரியில் முழ்கி இருவர் பலி!
திருவள்ளூர் அருகே ஏரியில் முழ்கி இருவர் பலி!

By

Published : Jul 26, 2022, 10:27 PM IST

திருவள்ளூர்: ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சதீஷ் மகன் சஜீவன் (17). அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலுவின் மகன் அருள் (17). ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த சத்தியநாராயணனின் மகன் பிரவீன் வெங்கடேசன் (17) ஆகியோர் கோலப்பன்சேரி சுங்கச்சாவடி அருகே உள்ள ஏரியில் குளிக்க வந்துள்ளனர்.

ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது சஜீவன் மற்றும் அருள் ஆகிய இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் வெங்கடேசன் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையிருக்கும் தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கியவர்கள் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போரடி தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடலையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட இருவரின் உடலையும் வெள்ளவேடு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'மாணவியருக்குத்தொல்லை தரும் இழி செயல் நடந்தால் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது' - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details