திருவள்ளூர்:ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் சேஷாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஹர்ஷ வர்தனன்(55). இவர் ஆட்டு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல், வியாபாரத்திற்காக திருத்தணி அடுத்த சத்திரஞ்ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் பாலச்சந்திரன்(48), வேலு(49) ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன்பின், நேற்று மாலை ஹர்ஷ வர்தனை வீட்டிற்கு வழியனுப்புவதற்கு பேருந்து ஏறுவதற்காக பாலச்சந்திரனுடன் அவரது இருசக்கர வாகனத்தில் வேலு, பாலச்சந்திரன் ஆகியோர் சென்றுள்ளார். அப்போது சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி, இந்த மூன்று பேரும் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலை, கால், கை உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.