திருவள்ளூர்:திருத்தணி அடுத்த கனகம்மா சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சிறப்பு காவல் பிரிவு போலீசார் கனகம்மா சத்திரம் அருகே வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
வாகன சோதனையில் சிக்கிய 20 கிலோ குட்கா... 2 பேர் கைது...
திருத்தணியில் வாகன சோதனையின்போது 20 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன்பின் போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர். 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2 பேரும் திருவள்ளூர் ஆசூரி தெருவை சேர்ந்த சத்ரா ராம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சத்ராராம் மீது ஏற்கனவே குட்கா கடத்தல் சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்