தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆரணி ஆற்றில் 2 சிறுவர்கள் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு - ஊத்துக்கோட்டை காவல்துறையினர் விசாரணை

ஈன்றபாளையத்தில் பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த சிறுவன் உள்பட் 2 சிறுவர்கள் ஆரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 சிறுவர்கள் உயிரிழப்பு
2 சிறுவர்கள் உயிரிழப்பு

By

Published : Jun 6, 2022, 1:41 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஈன்றபாளையம் கிராமத்தில் கோடை விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு வந்த பொன்னேரி அருகே உள்ள சிரளபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற கூலித் தொழிலாளியின் மகன் விக்கி என்ற கோகுல்(14).

இவர் பாட்டி வீட்டிற்கு வந்த இடத்தில் சிரஞ்சீவி என்பவரின் மகன் ருத்தீஷ் (14) ஆகிய இருவரும் இன்று (ஜூன் 6) அங்குள்ள ஆரணி ஆற்றின் ஓரம் ஆடுகளை மேய்க்கச் சென்றனர். அப்போது ஆற்றுநீரில் குளிப்பதற்காக நண்பர்களுடன் குதித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, ஆற்றில் ஆழமான பகுதியில் தவறி விழுந்து சேற்றில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு சிறுவர்களின் சடலங்களையும் மீட்ட கிராமத்தினர், இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், அங்கு வந்த போலீசார் உடல்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இரண்டு சிறுவர்கள் ஆரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடை விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்கு வந்திருந்த சிறுவனுடன் விளையாட்டாக உடன் சென்ற சிறுவனும் சேர்ந்து ஆரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தால் ஏழு பேர் பலி: உறவினர்கள் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details