திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டி அம்மன் நகர் சோதனை சாவடியில் காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் காரில் இருந்த இருவர், முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வாகனத்தை தீவிரமாக சோதனையிட்டனர்.
காரில் கடத்திவரப்பட்ட 4 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல் : இருவர் கைது - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் : செங்குன்றம் அருகே காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது காரில் கடத்தி வரப்பட்ட நான்கு லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனையில் காரின் அடியில் நான்கு பாட்டில்களில் கஞ்சா எண்ணெய் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நான்கு லிட்டர் கஞ்சா எண்ணெய்யை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த, அஜில் சத்தியன், அதில் மோன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் கோயம்புத்தூருக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.