திருவள்ளூர்:வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், இன்று (டிச.10) அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. அப்போது ஏற்பட்ட அதிக மழை மற்றும் பலத்த காற்றால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்துள்ளன. அந்த வகையில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலையோர மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
தற்போது இதனை அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களும் ஊராட்சி நிர்வாகமும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.