தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வருமான வரித்துறை அதிகாரி என கூறி நகை திருட்டு - 12 பேர் கைது

வருமான வரித்துறை அதிகாரி போல் போலி அடையாள அட்டையை காண்பித்து காண்ட்ராக்டர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் 12 பேரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வருமான வரித்துறை அதிகாரி என கூறி நகை திருட்டு
வருமான வரித்துறை அதிகாரி என கூறி நகை திருட்டு

By

Published : Mar 10, 2022, 12:19 PM IST

திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளத்தை சேர்ந்தவர் காண்ட்ராக்டர் பாலமுருகன். தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் மார்ச் மாதம் 1ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல போலி அடையாள அட்டை காண்பித்து ரெய்டு நடத்தி 116 சவரன் தங்க நகை, 2 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணம், சொத்து பத்திரங்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை தேட ஆரம்பித்தனர். முதற்கட்டமாக கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த தனிப்படை காவல் துறையினர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ரனேஷ் (46), பார்த்தசாரதி (45), நூறுலாஸ்கர்(46), பிரவீன்குமார் டேனியல்(55), வினோத்குமார் (42) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து, சிவமுருகன் (52), நந்தகுமார் (39), ஊட்டியை சேர்ந்த பிரகாஷ் (29), மேட்டுப்பாளையம் கவிதா (30), பெங்களூரு வெங்கடேசன் (46), திருவள்ளூர் வசந்தகுமார் (39), திருநின்றவூர் செந்தில்நாதன் (42) ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 5 லட்சத்து 51 ஆயிரம் பணம் , 12 செல்ஃபோன், 2 கார்கள், காவல் துறை சீருடை, அரசாங்கத்தின் லெட்டர்பேட் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தனிப்படை காவல் துறையினர், 12 குற்றவாளிகளையும் ஆவடி ஆணையத்திற்கு உட்பட்ட செவ்வாபேட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகன விபத்து - சகோதரர்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details