தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடும் ரயிலில் செல்போனை பறிக்க முயற்சி - கீழே விழுந்த அப்பாவி இளைஞர் உயிரிழப்பு - திருவள்ளூர் அருகே விபத்து

திருவள்ளூர்: ஓடும் ரயிலில் கதவோரம் அமர்ந்து செல்போனை பார்த்துக்கொண்டு வந்த இளைஞரின் செல்போனை பறிக்க திருட்டு கும்பல் முயன்றபோது, ரயிலிலிருந்து தவறிவிழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

செல்போனை பறிக்க முயன்ற திருட்டு கும்பல்

By

Published : Oct 6, 2019, 10:42 AM IST

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாந்தின் நடஸ்ஸா (26). இவர் சென்னையிலிருந்து தனது குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் இரவு ஜிடி விரைவு ரயிலில் ஆந்திராவிற்கு சென்றார். அப்போது ஷாந்தின் நடஸ்ஸா, தனது செல்போனை பார்த்தப்படி ரயிலில் உள்ள படியில் அமர்ந்து பயணித்துள்ளார். ரயில் எண்ணூரை கடந்து அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது ரயிலின் வேகம் சற்று குறைந்தது.

அந்த நேரம் கீழே நின்றிருந்த செல்போன் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர், ஷாந்தின் நடஸ்ஸாவின் செல்போனை பறித்துள்ளார். செல்போன் பறிப்பினால் அதிர்ச்சியடைந்த ஷாந்தின் நடஸ்ஸா செல்போனை விடாமல் பிடிக்க முயன்றபோது ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் ரயில் சக்கரத்தில் சிக்கிய ஷாந்தின் நடஸ்ஸா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் கீழே விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டு ரயிலை நிறுத்தினர்.

பின்னர் ரயில்வே காவல் துறையினர் ஷாந்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் செல்போன் பறித்தவர்களை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் 16 வயது சிறுவன் உட்பட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (22), பிரகாஷ் (24), மகேஷ் (18), 16 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் இதே போன்று ரயிலின் படியில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளின் செல்போனை பறிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதும் தெரியவந்தது.

இதையும் படியுங்க:

லாரி மோதியதில் தலை நசுங்கி ஒருவர் பலி!

ABOUT THE AUTHOR

...view details