தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சானிடைசர், முகக்கவசம், கை சுத்திகரிப்பான் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை - thiruvallur news in corona

திருவள்ளுர்: கரோனா பாதிப்பால் சானிடைசர், முகக்கவசம், கை சுத்திகரிப்பான் உள்ளிட்ட பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

திருவள்ளுர்: கரோனா பாதிப்பால் சானிடைசர், மாஸ்க், ஹேன்ட்வாஷ் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
திருவள்ளுர்: கரோனா பாதிப்பால் சானிடைசர், மாஸ்க், ஹேன்ட்வாஷ் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

By

Published : Apr 1, 2020, 9:46 AM IST

Updated : Apr 1, 2020, 4:42 PM IST

கரோனா வைரஸ் பரப்புவதைக் கட்டுப்படுத்தும்விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் வெளியே செல்லும்போது சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும், முகத்தில் கவசம் அணிந்து செல்ல வேண்டும், வெளியே சென்று வீடு திரும்பும் மக்கள் கைசுத்திகரிப்பான் மூலம் கைகளைக் கழுவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அரசு பொதுமக்களுக்கு வழங்கிவருகிறது.

சானிடைசர், முகக்கவசம், கை சுத்திகரிப்பான் உள்ளிட்ட பொருள்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை

இந்நிலையில் திருவள்ளுரில் சானிடைசர், முகக்கவசம், கை சுத்திகரிப்பான் உள்ளிட்ட பொருள்களை மக்கள் அதிகமாக வாங்கிச் செல்வதால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சானிடைசர், முகக்கவசம், கை சுத்திகரிப்பான் உள்ளிட்ட பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இந்நிலைியில் திருவள்ளுரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உழவர் சந்தை அருகே புதிய கடை திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், திட்ட இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் விற்பனையைத் தொடங்கிவைத்தனர்.

சானிடைசர் தனியார் மருந்துக்கடைகளில் ரூபாய் 570 முதல் 600 வரையிலும், முகக்கவசம் ரூபாய் 20 முதல் 30 வரையிலும் விற்கப்படும் சூழ்நிலையில், இங்கு சானிடைசர் 250 ரூபாய்க்கும், மாஸ்க் 10 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மேலும் பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும்வகையில் இந்தக் கடை காலை முதல் இரவு வரை செயல்படும் எனத் திட்ட இயக்குநர் ஜெயக்குமார் தெரிவித்தார்

இதையும் படிக்க:புதியதாக உற்பத்தி செய்யும் முக கவசம் பயன்பாட்டுக்கு வரும் போது விலை குறைக்கப்படும்'

Last Updated : Apr 1, 2020, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details