தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ் வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்...! - Corona Awareness Program in Tiruvallur

திருவள்ளூர்: ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருநங்கைகள் வைரஸ் மற்றும் காளி போன்ற வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கரோனா விழிப்பிணர்வில் திருநங்கைகள்
கரோனா விழிப்பிணர்வில் திருநங்கைகள்

By

Published : Jul 18, 2020, 12:16 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (17.07.20) ரோட்டரி சங்கம் சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகள் வைரஸ், காளி, அம்மன் போன்று வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் முகக் கவசம் அணிவது, தகுந்த விலகலை கடைபிடிப்பது குறித்தும், கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரோனா விழிப்புணர்வில் திருநங்கைகள்

மேலும் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக் கவசம் அணிவித்தும், கபசுரக் குடிநீர் மற்றும் சத்து மாத்திரை ஆகியவற்றையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வழங்கினார்.

இதையும் படிங்க:கடனுக்கு லஞ்சம், விவசாயிகளிடம் ஆபாச பேச்சு, போதையில் தள்ளாடும் வங்கி அலுவலர் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details