தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது - Thiruvallur news in tamil

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ரயில் மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

train-roko-in-thiruttani-100-were-arrested
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது

By

Published : Sep 27, 2021, 3:06 PM IST

திருவள்ளூர்:திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவும் முழு அடைப்பு போராட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், விவசாய சங்கங்கள், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தவிருந்தன. விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து காவலர்கள், தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பாரத் பந்த் காரணமாக தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details