தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரியில் ஏற்றி சென்ற ராட்சத பீம் சங்கிலி அவிழ்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு - திருப்பதி நெடுஞ்சாலை

திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் ஏற்றி வந்த ராட்சத பீம் சங்கிலி அவிழ்ந்து கீழே விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் லாரியில் ஏற்றி வந்த ராட்சச பீம் சங்கிலி அவிழ்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
நெடுஞ்சாலையில் லாரியில் ஏற்றி வந்த ராட்சச பீம் சங்கிலி அவிழ்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

By

Published : Jun 5, 2022, 7:43 AM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடக்கக் கூடிய பகுதியாக உள்ளது. தற்போது பெரியபாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிக்காக தொழிற்சாலையில் சென்டர் பீம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றி வரப்பட்ட ராட்சத பீம் சங்கிலி அறுந்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தலைமை அரசு மருத்துவமனை அருகே விழுந்தது.

இதில், அதிருஷ்டவசமாக உயிரிழப்புகள், காயங்கள் எதுவும் இல்லாமல் ஓட்டுநர் மற்றும் சாலையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் தப்பினார்கள்.

அதுமட்டுமல்லாமல் இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் நகர காவல்துறையினர் உடனடியாக அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் அனுப்பினர்.

இதையும் படிங்க: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: கார் கதவுகள் மூடியதால் 3 சிறுவர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details