தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. பாஜகவின் விவசாய அணி சார்பில் டிராக்டர் பேரணி - டிராக்டர் பேரணி

75 ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் பாஜகவின் விவசாய அணி சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

சுதந்திர தின விழா கொண்டாட்டம்.., விவசாய அணி சார்பில் டிராக்டர் பேரணி..,
சுதந்திர தின விழா கொண்டாட்டம்.., விவசாய அணி சார்பில் டிராக்டர் பேரணி..,

By

Published : Aug 14, 2022, 10:28 PM IST

திருவள்ளூர்:75-வது சுதந்திரன தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதனையடுத்து பாஜக சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, இன்று(ஆக.14) திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகிலிருந்து விவசாய அணி சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

பேரணியை மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து டிராக்டரில் பயணித்து அவரும் பங்கேற்றார். இந்தப் பேரணியானது சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, சி.வி.என்.சாலையில் உள்ள காமராஜர் சிலை வரை சென்று நிறைவுபெற்றது.

டிராக்டர் பேரணி

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் சந்திப்பில், “செருப்பு வீசியவர்கள் பாஜக தொண்டர்களா என்று விசாரணைக்குப் பிறகு தான் தெரிய வரும். ஒருபோதும் இதுபோல வன்முறையில் ஈடுபடாது பாஜக” எனத் தெரிவித்தார்.

இந்தப் பேரணியில் மாநில செயலாளர் வின்டோஸ் பி.செல்வா , மாநிலத் தலைவர் மத்திய அரசு திட்டம் லோகநாதன்,ராஜ்குமார் ஓ பி சி அணி மாநில தலைவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் என்கிற ராஜசிம்ம மகேந்திரா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாகரன், லயன் சீனிவாசன்,

ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், மாவட்ட செயலாளர்கள் சி.பி ரமேஷ்குமார், த.பாலாஜி, விவசாய அணி மாவட்ட தலைவர் சுபாஷ் விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் வாசுதேவன் சங்கர் நகர தலைவர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் இந்த டிரேக்டர் பேரணியில் பங்கேற்று, இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: நாளை காந்தியடிகளின் திருவுருவச்சிலையினை திறந்துவைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details