திருப்பெரும்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணியின் வேட்பாளர் டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். இவர் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்ட செயலாளர் நாசர், வேட்பாளர் டி. ஆர்.பாலுவை அறிமுகம் செய்துவைத்தார்.
கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்!
திருவள்ளூர்: திமுக மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் தொண்டர்களிடையே திருப்பெரும்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டி.ஆர் பாலு கண்ணீர் மல்க வாக்கு சேகரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் கூட்டத்தில் பேசிய டி. ஆர்.பாலு, "நாடாளுமன்ற வேட்பாளரான என்னை 45 வருடம் வளர்த்தவர் கருணாநிதி. தேர்தலில் நேர்மையான முறையில் வெற்றிபெற்றால், திருப்பெரும்புத்தூரில் பல்கலைக்கழகமும், ஓரகடம் சந்திப்பில் மிகப்பெரிய முக்கோண மேம்பாலமும் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று உறுதியளித்தார். மேலும், தொண்டர்களிடையே கண்ணீர் மல்க வாக்கு சேகரித்தார்.
கூட்டத்தில் திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாசர் மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி மற்றும் அனைத்து தோழமைக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.