தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா எண்ணிக்கை 1,797ஆக உயர்வு - collector maheshwari

திருவள்ளூர்: மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,797ஆக உயர்ந்துள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரோனா
கரோனா

By

Published : Jun 14, 2020, 4:21 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,797 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில், பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 848 பேர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் 928 பேர். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக உள்ளது என ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதன் பரலை தடுக்கும் நோக்கில் தூய்மை செய்யப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய வீடுகள் அனைத்தும் சீல் வைத்து நகராட்சி மூலமாகவும் பஞ்சாயத்து மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதோடு தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:தீவிரமாகும் கரோனா - மக்கள் வீடுகளைக் காலி செய்யும் அவலம்!

ABOUT THE AUTHOR

...view details