திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த புதுக்குப்பத்தில் தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த ஒடிசாவை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் எனக் கூறியதால் அவர்களை உரிமையாளர்கள் தாக்கினர். இதில் நான்கு பேர் காயமடைந்ததில் ஒரு பெண் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஊருக்கு செல்ல அனுமதி கேட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடூரம்! - The owner of a brick kiln that struck Northern Territory workers
திருவள்ளூர்: ஊருக்கு செல்ல வேண்டும் எனக் கேட்ட வடமாநில தொழிலாளர்களை செங்கல் சூளையின் உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர்.
செங்கல் சூளை உரிமையாளர்களால் தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்
இதனையடுத்து செங்கல் சூளையின் உரிமையாளர்கள் முனுசாமி, லக்ஷ்மிபதி, மேலாளர் ஆசிர்வாதம் ஆகியோர் மீது வெங்கல் காவல் துறை 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவள்ளூர் கோட்டாட்சியர் வித்யா செங்கல் சூளையில் நேரில் ஆய்வு செய்து 3 தினங்களில் ரயில் ஏற்பாடு செய்து, சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர்களிடம் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க:காமராஜர் சிலையை அவமதித்த மூவர் குண்டர் சட்டத்தில் கைது