திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் ஏரி ஒன்று உள்ளது, சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் புனரமைக்கப்பட்டு சுமார் 6,500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு, ஏரிக்கு நடுவே தீவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஏரியை சுற்றி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அயப்பாக்கம் முதல் அம்பத்தூர் சாலை வழியே இருக்கும் ஏரிக்கரையோரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சமூக விரோதிகளால் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.