தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அதன்படி பெரியகுப்பம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் மாவட்டத் தலைவர் குட்டி தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், எழுதுப்பொருள்கள், இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் ஏழை, எளியவர்களுக்கு பிரியாணியும் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பிரியாணி வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் இது குறித்து மாவட்டத்தலைவர் குட்டி பேசுகையில், ”விஜய் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. நடிகர் விஜய், நாளைய தமிழ்நாடு முதலமைச்சராக மக்களுக்குச் சேவையாற்ற உள்ளார்.
ஆகையால், பொதுமக்கள் அனைவரும் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார். இதில் விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி, இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் ஆகியோரும் உடன் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : மாஸ்டராக மாறி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகை