தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலங்கள் பூர்த்தியடைவில்லை.. ஆனால் சுங்க வசூல் மட்டும் படுஜோர் - லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் - thiruvallur news

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலான இடங்களில் பாலங்கள் பூர்த்தியடையாத நிலையில் பட்டறைப் பெரும்புதூரில் சுங்கச்சாவடி அமைத்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

lorry owners association protest, toll collection is on process, bridges work pending in thiruvallur, லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம், திருவள்ளூர் ஆர்ப்பாட்டம், திருவள்ளூர் போராட்டம், திருவள்ளூர் மாவட்ட செய்திகள், thiruvallur news, thiruvallur protest
lorry owners association protest

By

Published : Jan 8, 2021, 10:59 AM IST

திருவள்ளூர்:பாலங்கள் பூர்த்தியடையாத போதும், சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு வசதியாக எந்த தடங்கலுமின்றி செல்லக்கூடிய வகையில் சாலைகள் அமைத்து மத்திய அரசு சுங்கச்சாவடி மூலம் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்வதுண்டு. அதேபோல் திருவள்ளூர் அடுத்த பட்டறைப் பெரும்புதூரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச் சாவடி அமைத்து பணம் வசூல் செய்துவருகின்றனர்.

ஆனால் திருவள்ளூரிலிருந்து பட்டறைப் பெரும்புதூர் வரையிலுள்ள பெரும்பாலான பாலங்கள் முடிவடையாமல் உள்ளது. அதே நேரத்தில் தரைப்பாலங்களைச் சீரமைக்காமலும், புதிய பாலங்களைக் கட்டாததால் கடந்த மழைக்கு நாராயணபுரத்திலுள்ள தரைப்பாலம் அடித்து செல்லக்கூடிய நிலையிலுள்ளது.

எனவே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டியும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பட்டறைப் பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு தலைவர் பொன்.குமார், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் நலச்சங்க தலைவர் கண்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக மேம்பாலப் பணிகளை முடிக்க வேண்டும், பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்றும், அதுவரை 50 விழுக்காடு சுங்கவரி மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details