தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கையில் மாம்பழத்துடன் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்! - பாமக வேட்பாளர் வைத்திலிங்கம்

திருவள்ளூர் : கையில் மாம்பழத்தை ஏந்தியபடி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத்தொகுதி பாமக வேட்பாளர் மருத்துவர் வைத்திலிங்கம் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

mango

By

Published : Apr 2, 2019, 9:03 PM IST

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக-பாமக கூட்டணி சார்பாக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இன்று பரப்புரையை மேற்கொள்வதற்கு முன்னர் பாடி திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் செய்தார்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வைத்திலிங்கம்

பின்னர் 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து செல்ல, திறந்த வேனில் வந்த வைத்திலிங்கம் கையில் மாம்பழத்தை ஏந்தியவாறு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதி வீதியாக சென்ற வைத்திலிங்கத்திற்கு மக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வாக்கு சேகரிப்பின் போது அம்பத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி. அலெக்ஸாண்டர், பாமகவின் மாநில துணை அமைப்பு செயலாளர் சேகர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.


ABOUT THE AUTHOR

...view details