திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலை மறுசீரமைப்பதற்காக கோயில் நிர்வாகிகள் கதவை திறந்து வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளனர். பின்னர் திரும்பவும் மாலை வந்த போது வடமாநில இளைஞர் ஒருவர் அரை நிர்வாணமாக கோயிலில் இருந்த பீரோவை ஆராய்ந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சிலைகளை உடைத்த வடமாநில இளைஞர் கைது - damages god idol
திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் உள்ள பழமையான அகத்தீஸ்வரர் கோவிலின் சிலைகளை சேதப்படுத்திய வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![சிலைகளை உடைத்த வடமாநில இளைஞர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3499857-thumbnail-3x2-idol.jpg)
பின்னர் கோயில் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கோயிலில் ஆய்வு செய்தபோது அந்த வாலிபர் இரண்டு பழமை வாய்ந்த சிலைகளை சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் போது பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துக் கொள்வதால், உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.